வேத ஜோதிடத்தில் தைரியம், வீரம், துணிச்சல் மற்றும் வலிமையின் காரக கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக விளங்கும் செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசி மாற்றம் மேற்கொள்வதுடன், நட்சத்திர மாற்றங்களையும் மேற்கொள்கிறார்.
தற்போது மேஷ ராசியில் பயணித்து வரும் செவ்வாய், ஜூன் 16ஆம் தேதி ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழையவுள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் என்பதாலும், சூரியன் மற்றும் செவ்வாய் நட்பு கிரகங்களாக கருதப்படுவதாலும் இந்த பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுவதாக கூறப்படுகிறது.
இந்த கிரக நிலை மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும் எனினும், குறிப்பாக மேஷம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், நீண்டகாலமாக கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு செய்த முதலீடுகள் லாபத்தை தரக்கூடும் என்றும், பணியிடத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வு வாய்ப்புகள் உருவாகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலம் அதிர்ஷ்டகரமாக இருக்கும் எனவும், தடைபட்ட பணிகள் நிறைவேற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வணிக துறையில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும் என்றும், சமூகத்திலும் பணியிடத்திலும் மதிப்பு உயரக்கூடும் என்றும் ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து, வேலை வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வு போன்ற நன்மைகள் ஏற்படலாம் எனவும், புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உருவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் ஜோதிடக் கணிப்புகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக