BREAKING
தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை

ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

ஆராச்சிகட்டு பகுதியில் இலங்கை தரக்கட்டளை நிறுவனம் (SLSI) வழங்கும் அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்த பதப்படுத்தப்பட்ட மீன் உற்பத்தித் தொழிற்சாலையொன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இன்று (11) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, முறையான பதிவு மற்றும் அனுமதி இன்றி உற்பத்தி செய்து பொதியிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான பதப்படுத்தப்பட்ட மீன் தயாரிப்புகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த தயாரிப்புகள் நிறுவப்பட்ட தரநிலைகளை மீறி தயாரிக்கப்பட்டு சந்தையில் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் எனவும், இது நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பொதுமக்கள் பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் பிற பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரச்சான்றுகள் மற்றும் லேபிள் விவரங்களை சரிபார்த்து மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத வணிக நடவடிக்கைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மீறல்கள் தொடர்பான தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"