இலங்கையின் பல மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, புத்தளம், கல்முனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயம் அதிகமாக காணப்படும் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தெளிவான நீர் தேங்கும் இடங்களில் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் அபாயம் அதிகம் இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் கொசு கடியை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, தோலில் சிவப்பு புள்ளிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் ஏற்பட்டால் பராசிட்டமோல் மாத்திரை மட்டும் பயன்படுத்துமாறும், மருத்துவர் ஆலோசனை இன்றி பிற மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக