இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானியான சுரேஷ் சலே, தனக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் முக்கிய மடிக்கணினி மற்றும் அலைபேசியை ஒளித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மின்னணு சாதனங்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்கள், இரகசிய தகவல் பரிமாற்றங்கள், முக்கிய கலந்துரையாடல்கள் மற்றும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த சாதனங்களை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவை மீட்கப்படும் பட்சத்தில் பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய சில முக்கிய நபர்களுக்கும் இந்த விவகாரம் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அடுத்த கட்டத்தில் என்ன தகவல்கள் வெளியாகப்போகின்றன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக