BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

அனுராதபுரத்தில் கோர விபத்து: கர்ப்பிணி கிராம உத்தியோகத்தரும் வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழப்பு

அனுராதபுரத்தில் கோர விபத்து: கர்ப்பிணி கிராம உத்தியோகத்தரும் வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழப்பு

அனுராதபுரம் விமான நிலைய வீதியில் இடம்பெற்ற துயரமான சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும், அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆர்.எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அநுராதபுரம் மத்திய நுவரகம்பலாத பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராம உத்தியோகத்தராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி, கவரக்குளம் பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கி மற்றொரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த சிறிய லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். அதேவேளை, அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் லொறி ஓட்டுநரான 27 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கவரக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"