BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

வெசாக் வாரம் முழுவதும் விசேட பாதுகாப்பு ; சட்ட மீறல்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

வெசாக் வாரம் முழுவதும் விசேட பாதுகாப்பு ; சட்ட மீறல்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

வெசாக் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டங்கள் தற்போது செயற்பாட்டில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், தன்சல்கள், வெசாக் வலயங்கள் மற்றும் அதிக மக்கள் கூடும் பகுதிகளில் சீருடை மற்றும் சிவில் உடையிலான பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வு பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற நடத்தை, அபாயகரமான வாகன ஓட்டம், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் உள்ளிட்ட சட்ட மீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகத்திற்கிடமான செயல்கள் அல்லது அபாயகரமான வாகன இயக்கங்கள் தொடர்பாக பொதுமக்கள் 070-4755600 என்ற WhatsApp இலக்கத்திற்கோ அல்லது 119 / 188 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"