BREAKING
அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

காலி ஹபரதுவ கடற்கரையில் பரிதாபம் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் உயிரிழப்பு

காலி ஹபரதுவ கடற்கரையில் பரிதாபம் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் உயிரிழப்பு

தென்னிலங்கையில் உள்ள காலி, ஹபரதுவ கொக்கல கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 25 வயது ஜுட் ஷெவந்த பெரேரா மற்றும் 21 வயது என்டன் ஷெனாவ் பெரேரா ஆகியோர் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை அருகிலிருந்த ஹபரதுவ பொலிஸார் மற்றும் சுற்றுலா விடுதி உயிர்காப்புப் பிரிவு உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தாலும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பே இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

அந்த கடற்பகுதி மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். முன்னதாகவும் இதே பகுதியில் பலர் நீரில் மூழ்கி உயிருக்கு ஆபத்துக்குள்ளான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"