BREAKING
குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல் குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனும் யுவதியும் கைது இளம் சீனப் பிரஜை அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருள் இளைஞரின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் ஒருவர் SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல்

"வீரனே வா": போராட்டம் படத்திற்காக வாகீசன் பாடிய புதிய பாடல் ஏப்ரல் -ல் வெளியீடு!

"வீரனே வா": போராட்டம் படத்திற்காக வாகீசன் பாடிய புதிய பாடல் ஏப்ரல் -ல் வெளியீடு!

இலங்கையைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வாகீசன், தனது தனித்துவமான குரல் மற்றும் முருகன் மீதான பக்திப் பாடல்கள் மூலம் உலகளாவிய புகழைப் பெற்றவர். அண்மையில் சன் தொலைக்காட்சியின் 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக ரசிகர்கள் மத்தியிலும் நீங்காத இடம்பிடித்த அவர், தற்போது 'போராட்டம்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். IBC தமிழ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில், ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.


ஏற்கனவே இப்படத்தில் வெளியான 'வீர தமிழன்' மற்றும் 'முட்ட கண்ணு' ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மூன்றாவது பாடலான "வீரனே வா" வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. வாகீசனின் ஆவேசமான குரலில் உருவாகியுள்ள இப்பாடலின் வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. முன்னைய பாடல்களைப் போலவே இதுவும் ஒரு மாபெரும் ஹிட்டாக அமையும் என ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"