BREAKING
சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட வந்த கனேடிய பிரதிநிதிகள் அனுமதி இன்றி திரும்பினர் சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட வந்த கனேடிய பிரதிநிதிகள் அனுமதி இன்றி திரும்பினர்

வயது சிறுவன் செய்த ருத்ரதாண்டவம்: சிஎஸ்கே-வை துவம்சம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

வயது சிறுவன் செய்த ருத்ரதாண்டவம்: சிஎஸ்கே-வை துவம்சம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐபிஎல் 2026 தொடரின் 3-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நந்ரே பர்கரின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 127 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜேமி ஓவர்டன் (43) தவிர மற்ற முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


128 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில், 15 வயதே ஆன தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்றுச் சாதனை படைத்தார். வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள் விளாசிய அவர், 5 மெகா சிக்ஸர்களுடன் 305.88 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் சிஎஸ்கே பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். வைபவ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் (38) அதிரடியால் ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த மெகா தோல்வியால் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் -4.171 ஆகக் குறைந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 15 வயது சிறுவனிடம் அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"