BREAKING
இரவோடு இரவாக நாட்டுக்கு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ஷ இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம் வாகன தரிப்பிடத்தில் இருவர் செய்த தகாத செயல் ; வங்கி கணக்கில் குவிந்து கிடக்கும் பல கோடி ரூபாய் பணம் பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை இளம் பொலிஸ் அதிகாரி செய்த தவறான செயல் ; நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம் அம்பலம் இரவோடு இரவாக நாட்டுக்கு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ஷ இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம் வாகன தரிப்பிடத்தில் இருவர் செய்த தகாத செயல் ; வங்கி கணக்கில் குவிந்து கிடக்கும் பல கோடி ரூபாய் பணம் பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை இளம் பொலிஸ் அதிகாரி செய்த தவறான செயல் ; நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம் அம்பலம்

அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு

அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு
அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! 
மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு.. 



வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்கு என வலியுறுத்தி வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்றது.

காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டத்தில் காணிகளை இழந்த முல்லைத்தீவு கேப் பாப்புலவு மக்கள் அமைப்பு, மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரவை போராட்ட குழு, யாழ் வலி வடக்கு தையிட்டி ,மயிலிட்டி பலாலி ,வசாவிளான் போராட்ட அமைப்புக்கள் மற்றும் கிராஞ்சி ,பொன்னா வெளி போராட்ட அமைப்பு க்கள் பங்குற்றி இருந்தன.

போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு, அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அழிக்காதே, தையிட்டி என்ன தருசு நிலமா, மயிலத்தமடு மாதவனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"