BREAKING
இரவோடு இரவாக நாட்டுக்கு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ஷ இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம் வாகன தரிப்பிடத்தில் இருவர் செய்த தகாத செயல் ; வங்கி கணக்கில் குவிந்து கிடக்கும் பல கோடி ரூபாய் பணம் பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை இளம் பொலிஸ் அதிகாரி செய்த தவறான செயல் ; நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம் அம்பலம் இரவோடு இரவாக நாட்டுக்கு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ஷ இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம் வாகன தரிப்பிடத்தில் இருவர் செய்த தகாத செயல் ; வங்கி கணக்கில் குவிந்து கிடக்கும் பல கோடி ரூபாய் பணம் பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை இளம் பொலிஸ் அதிகாரி செய்த தவறான செயல் ; நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம் அம்பலம்

ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய நபராக குற்றம் சாட்டப்படும் ஷிரான் பாசிக்குச் சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஷிரான் பாசிக்குச் சொந்தமான அனைத்து வங்கிக் கணக்குகள் மற்றும் அவருடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெருந்தொகை பணத்தை ஈட்டியதாக குற்றம் சாட்டப்படும் ஷிரான் பாசிக், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு சொத்துக்களை வைத்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவரது பெயரில் நேரடியாக உள்ள வங்கிக் கணக்குகள் மட்டுமன்றி, பினாமி பெயர்களில் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் வங்கிச் சேமிப்புகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷிரான் பாசிக் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சொத்துக்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"