BREAKING
சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட வந்த கனேடிய பிரதிநிதிகள் அனுமதி இன்றி திரும்பினர் சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட வந்த கனேடிய பிரதிநிதிகள் அனுமதி இன்றி திரும்பினர்

"சஞ்சீவ் கோயங்கா ஒரு கோமாளி": லலித் மோடி கடும் தாக்குதல் - ஐபிஎல் அணிகளின் அதிரடி விற்பனையால் வெடித்த சர்ச்சை!

"சஞ்சீவ் கோயங்கா ஒரு கோமாளி": லலித் மோடி கடும் தாக்குதல் - ஐபிஎல் அணிகளின் அதிரடி விற்பனையால் வெடித்த சர்ச்சை!

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சுமார் 16,600 கோடி ரூபாய்க்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுமார் 15,000 கோடி ரூபாய்க்கும் புதிய குழுமங்களுக்கு விற்கப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்ட வளர்ச்சியைப் பாராட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஐபிஎல் தொடரின் இந்த மாபெரும் மதிப்பிற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் தொலைநோக்கு பார்வையே முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.


ஐபிஎல் தொடரை உருவாக்கிய லலித் மோடியின் பெயரை அவர் குறிப்பிடாததால் ஆத்திரமடைந்த லலித் மோடி, சஞ்சீவ் கோயங்காவை "கோமாளி" எனச் சாடியுள்ளார். "இந்த ஐபிஎல் மாடலை உருவாக்கியது யார் என்பதை கோயங்கா மறந்துவிட்டார்; அவருக்கு ஞாபக மறதி வந்துவிட்டது. ஒரு ட்வீட் மூலம் வரலாற்றை மாற்றிவிடலாம் என நினைக்கும் இவருக்கு கிரிக்கெட் குறித்து எந்த அறிவும் இல்லை," என லலித் மோடி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். 2010-ல் இந்தியாவை விட்டு வெளியேறிய லலித் மோடி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஐபிஎல் விவகாரத்தில் உரிமையாளர் ஒருவரை பகிரங்கமாக வசைபாடியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"