BREAKING
மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை யாழ். செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய முன்பள்ளிப் பாலகன் ; பெற்றோர், ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணை சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த 15 வயது சிறுமி ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு ; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில் சஜித்துக்கு மனோ கணேசன் கடிதம் மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை யாழ். செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய முன்பள்ளிப் பாலகன் ; பெற்றோர், ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணை சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த 15 வயது சிறுமி ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு ; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில் சஜித்துக்கு மனோ கணேசன் கடிதம்

"மூளை நரம்புகள் வெடித்தன!" - படுக்கையிலிருந்த ஆண்டுகள்: மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்த முமைத் கான்.

"மூளை நரம்புகள் வெடித்தன!" - படுக்கையிலிருந்த ஆண்டுகள்: மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்த முமைத் கான்.

முமைத் கான் உச்சக்கட்ட புகழில் இருந்தபோது, தனது 30 வயதில் வீட்டில் இருந்த கட்டிலில் இருந்து எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


விபத்தைத் தொடர்ந்து அவர் 15 நாட்கள் கோமா நிலையில் இருந்துள்ளார்.

மூளைக்குச் செல்லும் 5 முக்கிய நரம்புகள் வெடித்ததால், அவரது உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்டது.

சுயநினைவு திரும்பிய பிறகும், அடுத்த 7 ஆண்டுகளுக்கு எந்த வேலையும் செய்யக்கூடாது, கனமான பொருட்களைத் தூக்கக்கூடாது மற்றும் வலிப்பு வராமல் இருக்கத் தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


சினிமா வாய்ப்புகள் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்த அவர், இப்போது மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.

ஹைதராபாத்தில் சொந்தமாக மேக்-அப் மற்றும் ஹேர் டிரெஸ்ஸிங் (Makeup & Hair Dressing Institute) பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பகிர்ந்து மீண்டும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

"என்னை முமைத் கானாக அழகு பார்த்த கடவுளே, என் கேரியருக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார். அந்த 7 ஆண்டுகளில் நான் யாரென்று எனக்கே புரிந்தது. இப்போது மீண்டும் பழையபடி உற்சாகமாக இருக்க முயல்கிறேன்."

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"