BREAKING
இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர் இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர் இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை

கோடி சொத்துகளை மகனுக்கு வழங்காத ஜாக்கி சான் மனிதநேயத்தால் உயர்ந்த ரியல் ஸ்டார்

கோடி சொத்துகளை மகனுக்கு வழங்காத ஜாக்கி சான் மனிதநேயத்தால் உயர்ந்த ரியல் ஸ்டார்

90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கு ஜாக்கி சான் என்றால் சினிமாவை தாண்டி ஒரு உணர்ச்சி. உலகம் முழுவதும் சாகச நட்சத்திரமாக கொண்டாடப்பட்ட இவர், தனது தனித்துவமான ஆக்ஷன் பாணி மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

இன்றைய ஜென் Z தலைமுறைக்கு ஜாக்கி சானின் சாகசங்கள் முழுமையாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவரது எந்த ஒரு திரைப்படத்தை பார்த்தாலே, அவர் ஏன் உலகளவில் புகழ்பெற்ற நடிகர் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில், ஜாக்கி சான் மீண்டும் ஒரு முறை தனது மனிதநேய செயலால் உலக கவனத்தை ஈர்த்துள்ளார். சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துகளை, மகனுக்கு வழங்காமல், அனாதை ஆசிரமம் மற்றும் சமூக சேவை அமைப்புகளுக்கு எழுதி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சொத்துகள் இயல்பாக அவரது மகனுக்கு செல்ல வேண்டியவையாக இருந்தாலும், “நீ உழைத்து சம்பாதிக்க வேண்டும்” என்ற எண்ணத்துடன், தன் செல்வத்தை சமூக நலனுக்காக அர்ப்பணிக்க ஜாக்கி சான் முடிவு செய்துள்ளார். இதன் மூலம், பணம் மட்டுமே செல்வம் அல்ல; மனிதநேயம் தான் உண்மையான செல்வம் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஜாக்கி சானின் இந்த முடிவு, ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஒரு உலகப் புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், ஒரு உண்மையான மனிதநேய நட்சத்திரமாகவும் அவரது பெயர் இன்று பல மடங்கு உயர்ந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"