அரசாங்கம் தனிக்கட்சி ஆட்சியை நிறுவுவதற்கு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக இளைஞர் மன்றங்கள் முதல் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் வரையிலான பல்வேறு அமைப்புகளுக்கான நியமனங்கள் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கும் நீதிமன்றங்களின் சுயாதீனத்தன்மையை பாதிப்பதற்கும் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
22ஆம் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும் தனிக்கட்சி ஆட்சி முறையை முன்னெடுக்கும் உள்நோக்கத்தைக் கொண்டதாக அமைந்துள்ளதாக சஜித் பிரேமதாச மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக