BREAKING
செப்டம்பர் 2026 தொழில் ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு வேலை, தொழிலில் அதிர்ஷ்டம்! தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயற்சி - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு ஈரான் - அமெரிக்க போர்நிறுத்தம் பலவீனமானது - புடின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து தொடர் பாலியல் துஷ்பிரயோகம்? பிரித்தானிய கணவர் உட்பட 13 பேர் நீதிமன்ற விசாரணையில் மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி! “ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை மிஸ் பண்றேன்” – உருக்கமான பதிவு செப்டம்பர் 2026 தொழில் ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு வேலை, தொழிலில் அதிர்ஷ்டம்! தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயற்சி - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு ஈரான் - அமெரிக்க போர்நிறுத்தம் பலவீனமானது - புடின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து தொடர் பாலியல் துஷ்பிரயோகம்? பிரித்தானிய கணவர் உட்பட 13 பேர் நீதிமன்ற விசாரணையில் மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி! “ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை மிஸ் பண்றேன்” – உருக்கமான பதிவு

மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி! ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை மிஸ் பண்றேன் உருக்கமான பதிவு

மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி! ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை மிஸ் பண்றேன் உருக்கமான பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் பிரதீப் ஆண்டனி, தனது குடும்ப வாழ்க்கை தொடர்பாக வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

பிரதீப் ஆண்டனி, ‘அருவி’ மற்றும் ‘வாழ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் தனது கருத்துகளை வெளிப்படையாகவும் தயக்கமின்றியும் தெரிவித்த அவரது அணுகுமுறை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. அதேவேளை, நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில சர்ச்சைகளைத் தொடர்ந்து அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவமும் அப்போது பெரும் விவாதமாக பேசப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்திய பிரதீப் ஆண்டனி, கடந்த 2024ஆம் ஆண்டு பூஜா என்பவரை திருமணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதீப் ஆண்டனி வெளியிட்டுள்ள நீண்ட பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், மனைவி மற்றும் குழந்தையை பிரிந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று நல்ல குடும்பத்தை அமைத்துக்கொண்டு, தனது குழந்தைக்கு சிறந்த தந்தையாக இருப்பது என பிரதீப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது ஒன்றாக இணைந்து வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது குழந்தை மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகவும், குழந்தையை விட்டு பிரிந்திருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை ரொம்பவே மிஸ் பண்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளன.

பிரதீப் ஆண்டனியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவரது குடும்ப வாழ்க்கை குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதனிடையே, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும் என்றும், இந்த கடினமான சூழலில் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"