BREAKING
தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி

கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள்

கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள்

இலங்கையில் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹொட் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த சுபாஷ், கருணாவின் பணிப்புரையின் பேரில் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு முக்கிய காரணிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அக்காலகட்டத்தில் மட்டக்களப்பு பிரதேசத்திற்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் தலைமை தாங்கிய கருணாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யுமாறு சுபாஷ் தனது உறுப்பினர்களுக்கு கட்டளை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சுபாஷ் வழங்கியதாகக் கூறப்படும் அந்த உத்தரவின் அடிப்படையில் கருணா மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கிரான் சந்தியில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டதாகவும், அவருடன் ஹொட் அமைப்பின் மற்றுமொரு முக்கியஸ்தரும் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணா மற்றும் சுபாஷ் ஆகியோர் அக்காலகட்டத்தில் எவ்வாறான அரசியல் மற்றும் ஆயுத நடவடிக்கைகளின் பின்னணியில் செயற்பட்டனர், அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் எவ்வாறு தீவிரமடைந்தன என்பன தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

39 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான பின்னணி மற்றும் இதுவரை வெளிவராததாகக் கூறப்படும் தகவல்கள் குறித்து “உண்மைகள்” நிகழ்ச்சியில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"