BREAKING
தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை . இலட்சத்தை கடந்தது

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை . இலட்சத்தை கடந்தது

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 14 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையின் புள்ளிவிபரங்களின்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 1,468,980 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 125,562 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு, நாட்டின் சுற்றுலாத்துறையில் தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 25 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பது என்ற அரசாங்கத்தின் இலக்கு எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்னரே நிறைவேற்றப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருவதன் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகளில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"