BREAKING
அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பஸ் லலித் - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பஸ் லலித் - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’ கைது செய்யப்பட்டமையை வரவேற்று, ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த நபர் டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

இதனை முன்னிட்டு குறித்த பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடி பட்டாசுகளை வெடித்ததுடன், அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர தங்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைப் பறித்ததாக யாசகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே குறித்த நபர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமைக்கு அப்பகுதி மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள லலித் கன்னங்கர தொடர்பான மேலதிக விசாரணைகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"