BREAKING
5 மாவட்டங்களில் புதிய உந்துருளிகளுக்கான பதிவுகள் ஆரம்பம் 2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கனேடியக் கவிஞர் ஆன் கொர்சனுக்கு தாமதமாக வந்ததால் சீனா செல்லும் விமானத்தில் ஏற்ற மறுக்கப்பட்ட Npp எம்.பி. லக்மாலி கொழும்பில் வியட்நாம் நாட்டவர்கள் நால்வரை அறையில் அடைத்து தாக்கியதாக குற்றச்சாட்டு ; தம்பதியினர் கைது செப்புக் கம்பிகளைத் திருட வந்ததாகக் கூறப்படும் நபர் மீது துப்பாக்கிச் சூடு 5 மாவட்டங்களில் புதிய உந்துருளிகளுக்கான பதிவுகள் ஆரம்பம் 2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கனேடியக் கவிஞர் ஆன் கொர்சனுக்கு தாமதமாக வந்ததால் சீனா செல்லும் விமானத்தில் ஏற்ற மறுக்கப்பட்ட Npp எம்.பி. லக்மாலி கொழும்பில் வியட்நாம் நாட்டவர்கள் நால்வரை அறையில் அடைத்து தாக்கியதாக குற்றச்சாட்டு ; தம்பதியினர் கைது செப்புக் கம்பிகளைத் திருட வந்ததாகக் கூறப்படும் நபர் மீது துப்பாக்கிச் சூடு

உறவினர்களுடன் சென்ற வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இரசாயன திரவத்தை குடித்து உயிரிழப்பு

உறவினர்களுடன் சென்ற வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இரசாயன திரவத்தை குடித்து உயிரிழப்பு

வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர், உறவினர்களுடன் கம்பளை புப்புரஸ்ஸ பகுதிக்கு சென்றிருந்த நிலையில் இரசாயன திரவத்தை குடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே இருந்த சந்தர்ப்பத்தில், வீட்டிற்குள் சென்ற சிறுமி அங்கு வைக்கப்பட்டிருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சிறுமி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையில், பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் இரசாயனத்தை குடித்ததன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"