BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

ஆண்டுகளின் பின்னர் நுவரெலியாவில் கடும் குளிர் . பதிவாகியது

ஆண்டுகளின் பின்னர் நுவரெலியாவில் கடும் குளிர் . பதிவாகியது

25 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக,

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.

2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே பதிவாகியுள்ள மிகக் குறைந்தபட்ச வெப்பநிலை என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை நுவரெலியாவின் பல பகுதிகளில் உறைபனி விழுந்தது.

குறிப்பாக,

கிரெகரி ஏரி

ரேஸ்கோர்ஸ்

கோல்ப் மைதானம்

விக்டோரியா பூங்கா

காய்கறி வயல்கள்

தேயிலைத் தோட்டங்கள்

ஆகிய பகுதிகளில் கடும் குளிர் நிலவி, உறைபனி தாக்கம் பதிவாகியுள்ளது.

இந்த குறைந்தபட்ச வெப்பநிலைக்கு காற்றின் வடிவத்தில் ஏற்பட்ட மாற்றமே பிரதான காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வடக்கிலிருந்து நாட்டிற்குள் நுழையும் குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று இந்த நிலைமை உருவாகக் காரணமாகியுள்ளது.

மேகங்கள் இல்லாத நிலையில்,

பகலில் பூமி அதிகமாக வெப்பமடைந்து,

இரவில் வேகமாக குளிர்ச்சியடைவதால்

வெப்பநிலை திடீரென குறைவடைகிறது என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

இன்றைய தினம் காற்றின் வடிவம் மாறக்கூடும் என்றும்,

கிழக்கிலிருந்து வீசும் காற்று காரணமாக தற்போதைய குளிர் நிலைமை படிப்படியாக மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு நிலைய பணிப்பாளர் தெரிவிப்பதாவது,

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள்,

மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள்

ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேலும்,

வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும்,

மீதமுள்ள பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"