BREAKING
தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் திட்டமிட்ட ரயில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் உறுதி அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு அஹுங்கல்லையில் துப்பாக்கிச்சூடு முயற்சி ; மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிய பெண் தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் ; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் திட்டமிட்ட ரயில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் உறுதி அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு அஹுங்கல்லையில் துப்பாக்கிச்சூடு முயற்சி ; மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிய பெண் தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் ; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தவெகவில் இணையவில்லை; பரவும் தகவல்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்ட மறுப்பு

தவெகவில் இணையவில்லை; பரவும் தகவல்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்ட மறுப்பு

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தகவல்களுக்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மையல்ல என செய்தியாளர்களிடம் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், தமது தற்போதைய அரசியல் நிலை குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

ஒரு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், மற்றொரு கட்சியில் இணைந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தவறானவை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த மறுப்பு மூலம், தவெகவில் அவர் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவி வந்த தகவல்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"