BREAKING
வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம் திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு

சில பகுதிகளில் -க்கும் அதிகமான கனமழை; மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

சில பகுதிகளில் -க்கும் அதிகமான கனமழை; மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் அடுத்துவரும் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்போது, சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை மாற்றங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் ஒப்பீட்டளவில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை உணரப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மழை, பலத்த காற்று மற்றும் வெப்பநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"