BREAKING
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ.80.8 மில்லியன் நஷ்டஈடு! வாரிசுகளுக்கு வழங்க நடவடிக்கை நாட்டின் பொருளாதாரம் குறித்து ரணில் எச்சரிக்கை; 6 பில்லியன் டொலர் தேவைப்படலாம் என தகவல் ADB வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடன்; இலங்கையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டம் கடற்பரப்புகளில் 3 மீட்டர் வரை உயரக்கூடிய அலைகள்; மீனவர்களுக்கு எச்சரிக்கை பளை வனப்பகுதியில் புலிகள் பயிற்சி முகாம்? சமூக வலைத்தளப் பதிவுகளுக்கு அரசு மறுப்பு கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ.80.8 மில்லியன் நஷ்டஈடு! வாரிசுகளுக்கு வழங்க நடவடிக்கை நாட்டின் பொருளாதாரம் குறித்து ரணில் எச்சரிக்கை; 6 பில்லியன் டொலர் தேவைப்படலாம் என தகவல் ADB வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடன்; இலங்கையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டம் கடற்பரப்புகளில் 3 மீட்டர் வரை உயரக்கூடிய அலைகள்; மீனவர்களுக்கு எச்சரிக்கை பளை வனப்பகுதியில் புலிகள் பயிற்சி முகாம்? சமூக வலைத்தளப் பதிவுகளுக்கு அரசு மறுப்பு

கொழும்பில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்துடன் வயது இளைஞன் கைது

கொழும்பில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்துடன் வயது இளைஞன் கைது

கொழும்பு வெள்ளவீதி பகுதியில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்துடன் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான உண்டியல் முறையின் ஊடாக பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நபர் ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று மாலை வெள்ளவீதி பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 10,467,000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பான முறையான ஆவணங்களை குறித்த இளைஞரால் சமர்ப்பிக்க முடியவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பணச் சலவைச் சட்டத்தின் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து போலியான 1,000 ரூபாய் நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"