BREAKING
6 தலைமுறைகள், 83 குடும்ப உறுப்பினர்கள்... ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழும் ஆந்திராவின் அதிசய கூட்டுக் குடும்பம்! சன் டிவி லட்சுமி சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – இனி எந்த நேரத்தில் பார்க்கலாம்? இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு – 2030க்குள் வெறிநாய்க்கடி நோயை ஒழிக்க புதிய நடவடிக்கை கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது – ரூ.149 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பாரிய தீ விபத்து; பலர் உயிரிழப்பு, 6 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்கிறது 6 தலைமுறைகள், 83 குடும்ப உறுப்பினர்கள்... ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழும் ஆந்திராவின் அதிசய கூட்டுக் குடும்பம்! சன் டிவி லட்சுமி சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – இனி எந்த நேரத்தில் பார்க்கலாம்? இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு – 2030க்குள் வெறிநாய்க்கடி நோயை ஒழிக்க புதிய நடவடிக்கை கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது – ரூ.149 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பாரிய தீ விபத்து; பலர் உயிரிழப்பு, 6 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்கிறது

கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை ; கடுமையாக தாக்கும் ட்ரம்ப்

கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை ; கடுமையாக தாக்கும் ட்ரம்ப்

கனடா நாட்டை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக அவர் வெளியிட்ட கருத்துகள் தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் AI மூலம் உருவாக்கப்பட்ட படமொன்றை ட்ரம்ப் பகிர்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நடவடிக்கை பல்வேறு தரப்புகளின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கருத்து தெரிவித்த ட்ரம்ப்,

“அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்கிறது” எனக் கூறி கனடாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக, பிற நாடுகளை அச்சுறுத்த பொருளாதார பலத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது அமெரிக்கா என கனடா பிரதமர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த ட்ரம்ப்,

“அமெரிக்காவிடமிருந்து ஏராளமான இலவச சலுகைகளைப் பெற்றுவரும் கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை” என விமர்சனம் முன்வைத்துள்ளார்.

ட்ரம்பின் இந்த கருத்துகள், அமெரிக்கா – கனடா உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள், இந்த பேச்சுக்கள் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"