BREAKING
இரவோடு இரவாக நாட்டுக்கு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ஷ இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம் வாகன தரிப்பிடத்தில் இருவர் செய்த தகாத செயல் ; வங்கி கணக்கில் குவிந்து கிடக்கும் பல கோடி ரூபாய் பணம் பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை இளம் பொலிஸ் அதிகாரி செய்த தவறான செயல் ; நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம் அம்பலம் இரவோடு இரவாக நாட்டுக்கு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ஷ இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம் வாகன தரிப்பிடத்தில் இருவர் செய்த தகாத செயல் ; வங்கி கணக்கில் குவிந்து கிடக்கும் பல கோடி ரூபாய் பணம் பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை இளம் பொலிஸ் அதிகாரி செய்த தவறான செயல் ; நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம் அம்பலம்

கண்டியில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல் உண்மை என்ன? தேசிய இரத்தினக்கல் அதிகாரசபை விளக்கம்

கண்டியில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல் உண்மை என்ன? தேசிய இரத்தினக்கல் அதிகாரசபை விளக்கம்

கண்டி, கலஹா பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகே சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல் தொடர்பில் பரவிய வதந்திகளுக்கு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபை தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது.

அதிகாரசபை மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையில், குறித்த கல் உயர்தர இரத்தினக்கல் அல்ல என்றும்,

சந்தை அல்லது வணிக மதிப்பு இல்லாத சாதாரண லேப்ரடோரைட் (Labradorite) வகையைச் சேர்ந்தது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான பரிசோதனைகளில்,

இது ‘லேப்ரடோரசென்ஸ்’ (Labradorescence) எனப்படும் ஒளி பிரதிபலிப்பு தன்மையை கொண்டது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொதுவாக நீல நிற ஒளி பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் இந்த கனிமம்,

மற்றொரு பாறைக்குள் பொதிந்துள்ள சிறிய அளவிலான லேப்ரடோரைட் கல் என்பதும் உறுதியாகியுள்ளது.

இந்த கல் பெல்ட்ஸ்பார் (Feldspar) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கனிமமாகும்.

இதன் மீது ஒளி விழும் போது,

வானவில் போன்ற பல நிறங்களில் மின்னும் தோற்றம் உருவாகுவது இதன் தனிச்சிறப்பாகும்.

இந்த ஒளி பிரதிபலிப்பு காட்சியாலேயே இத்தகைய கற்கள் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்ப்பதாகவும்,

அதனால் தான் மர்மக்கல் என பரபரப்பு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம்,

இந்த கல் விலைமதிப்புள்ள இரத்தினக்கல் அல்ல என்றும்,

வர்த்தக ரீதியாக எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும்

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"