BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

கடற்படைத் தளபதி காஞ்சன பானகொட அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு

கடற்படைத் தளபதி காஞ்சன பானகொட அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, நேற்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடற்படையின் உயரிய தரநிலையான அட்மிரல் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

காஞ்சன பானகொட, கடந்த 2024 டிசம்பர் 31 ஆம் தேதி இலங்கை கடற்படையின் 26ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, கடற்படை மரபுகளுக்கு அமைவாக தற்போது அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் பிரதம தளகர்த்தருமான அனுர குமார திசாநாயக்கவால் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பதவியுயர்வைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதிக்கான பாரம்பரிய சிறப்பு மரியாதை அணிவகுப்பு இன்று கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கடற்படை அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று புதிய அட்மிரலுக்கு மரியாதை செலுத்தினர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"