BREAKING
டீயுடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை முட்டையை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டுமா? உணவு பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் அனுராதபுர குண்டுத்தாக்குதல் வழக்கு: பிரபாகரன் வழங்கியதாகக் கூறப்படும் பொருட்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு கிராமத்து சுவையில் மணம்கொஞ்சும் கருவாட்டு குழம்பு: எளிய முறையில் செய்வது எப்படி? 'காதல் சொல்ல வந்தேன்' நடிகர் யுதன் பாலாஜி தற்போது ஆஸ்திரேலியாவில் சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வருகிறார் டீயுடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை முட்டையை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டுமா? உணவு பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் அனுராதபுர குண்டுத்தாக்குதல் வழக்கு: பிரபாகரன் வழங்கியதாகக் கூறப்படும் பொருட்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு கிராமத்து சுவையில் மணம்கொஞ்சும் கருவாட்டு குழம்பு: எளிய முறையில் செய்வது எப்படி? 'காதல் சொல்ல வந்தேன்' நடிகர் யுதன் பாலாஜி தற்போது ஆஸ்திரேலியாவில் சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்

கழிப்பறை குழி தோண்டியபோது வெளிச்சத்துக்கு வந்த மர்ம பொருட்கள்; தொல்பொருள் சந்தேகத்தில் வயது நபர் கைது

கழிப்பறை குழி தோண்டியபோது வெளிச்சத்துக்கு வந்த மர்ம பொருட்கள்; தொல்பொருள் சந்தேகத்தில் வயது நபர் கைது

திருகோணமலை மாவட்டத்தின் சிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தொல்பொருள் மதிப்புடையதாக சந்தேகிக்கப்படும் பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் 54 வயதுடைய நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் புல்மோட்டை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, தொல்பொருள் மதிப்புடையதாக கருதப்படும் பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் சிறிய செம்பு பாத்திரம், பட்டை தீட்டப்பட்ட வெளிப்படையான கல், இரத்தினக்கல் என சந்தேகிக்கப்படும் சாம்பல் மற்றும் பழுப்பு நிறக் கற்கள், மேலும் ஒன்பது வெளிப்படையான கல் துண்டுகள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தனது வீட்டில் கழிப்பறை குழி தோண்டும் பணியின்போது பாறை போன்ற கல் ஒன்று கிடைத்ததாகவும், அதை உடைத்தபோது அதன் உள்ளிருந்து இந்த பொருட்கள் கிடைத்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் உண்மையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவையா அல்லது இயற்கையாக உருவான கற்களா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவை சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக சிறிபுர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடனும் விசாரணைகள் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதாரண தோண்டுதல் பணியின் போது கிடைத்ததாகக் கூறப்படும் இந்த மர்ம பொருட்கள், அப்பகுதியில் பழமையான குடியிருப்புகள் அல்லது வரலாற்று சான்றுகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளதால், சம்பவம் தற்போது அதிகாரிகளின் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"