BREAKING
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

பாதயாத்திரையில் பயணித்த நாயை உதைத்த இளைஞர்; கல்முனை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

பாதயாத்திரையில் பயணித்த நாயை உதைத்த இளைஞர்; கல்முனை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற கதிர்காம பாதயாத்திரை நிகழ்வின் போது, யாத்திரீகர்களுடன் பயணித்த ‘சுப்பிரமணியன்’ எனப்படும் நாயை இளைஞர் ஒருவர் உதைத்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை வீதியில் நடந்த இந்தச் சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பல இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை வெளியிட்டன.

சம்பவம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த கல்முனை தலைமையக பொலிஸார், 21 வயதுடைய சந்தேகநபரை கைது செய்தனர்.

வழக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் சந்தேகநபரை தலா ரூ.50,000 சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கு ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நாய் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி நடந்து வரும் யாத்திரைக் குழுவுடன் இணைந்து சுமார் 450 கிலோமீற்றர் தூரம் பயணித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் வைரலாகி, விலங்குகள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"