BREAKING
யாழில் பௌர்ணமி தினத்தில் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல் இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞன் ; தீவிரமாகும் விசாரணை திருமணம், DJ நிகழ்ச்சிகளில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் ; வெளியான முக்கிய தகவல் அரசாங்க சேவையில் மனிதவள அபிவிருத்திக்காக GovHR ஆரம்பம் அதிகாலையில் விமான நிலையத்தை பரபரபாக்கிய சீனப் பிரஜைகள் ; தீவிரமாகும் விசாரணைகள் யாழில் பௌர்ணமி தினத்தில் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல் இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞன் ; தீவிரமாகும் விசாரணை திருமணம், DJ நிகழ்ச்சிகளில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் ; வெளியான முக்கிய தகவல் அரசாங்க சேவையில் மனிதவள அபிவிருத்திக்காக GovHR ஆரம்பம் அதிகாலையில் விமான நிலையத்தை பரபரபாக்கிய சீனப் பிரஜைகள் ; தீவிரமாகும் விசாரணைகள்

ஹரக்கட்டா இலஞ்ச விவகாரம்: முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் தொடர்பில் புதிய தகவல்கள்

ஹரக்கட்டா இலஞ்ச விவகாரம்: முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் தொடர்பில் புதிய தகவல்கள்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக்கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி, அவரை சாதாரண சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விசாரணையின் போது வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் வழங்கிய ஹேரத் முதியான்சேலாகே கொனகெதர நிர்மாண இந்திரஜித் பண்டார எனப்படும் ஹெர்பி, டுபாயில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஹரக்கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்குவதற்காக பல்வேறு அதிகாரிகளுக்கு பணம் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கையை சாகல ரத்நாயக்க ஊடாக முன்னெடுக்க முடியும் என அப்போது தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாக்குமூலம் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இதில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை எந்தவொரு இறுதி நீதித் தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"