BREAKING
புதிதாகப் பொறுப்பேற்ற 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம் கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம் வங்காள விரிகுடாக் கடற்பகுதி வெப்பமடையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் இலங்கையை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடாக் கடற்பகுதி 28 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்ப அதிகரிப்பைக் கொண்டுள்ளது புதிதாகப் பொறுப்பேற்ற 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம் கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம் வங்காள விரிகுடாக் கடற்பகுதி வெப்பமடையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் இலங்கையை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடாக் கடற்பகுதி 28 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்ப அதிகரிப்பைக் கொண்டுள்ளது

மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம்!
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளன.

​முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில், பின்னால் வேகமாக வந்த பேருந்து மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரியவருகிறது.

​இவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபரின் கால் பகுதியில் பலத்த உடைவு ஏற்பட்டுள்ளது. 

விபத்தைத் தொடர்ந்து காயமடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"