BREAKING
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம் வங்காள விரிகுடாக் கடற்பகுதி வெப்பமடையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் இலங்கையை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடாக் கடற்பகுதி 28 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்ப அதிகரிப்பைக் கொண்டுள்ளது மட்டக்களப்பில் பேருந்து விபத்து! வெறும் வாக்குறுதிகள் அல்ல; தரவுகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட பொருளாதார மாற்றமே இன்று எமக்குத் தேவை ஜனாதிபதி அநுரவின் புதிய அதிரடி அறிவிப்பு; ஊழல் குற்றச்சாட்டில் உண்மைகளை வெளிப்படுத்துவோருக்கு சட்ட ரீதியான சலுகை யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம் வங்காள விரிகுடாக் கடற்பகுதி வெப்பமடையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் இலங்கையை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடாக் கடற்பகுதி 28 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்ப அதிகரிப்பைக் கொண்டுள்ளது மட்டக்களப்பில் பேருந்து விபத்து! வெறும் வாக்குறுதிகள் அல்ல; தரவுகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட பொருளாதார மாற்றமே இன்று எமக்குத் தேவை ஜனாதிபதி அநுரவின் புதிய அதிரடி அறிவிப்பு; ஊழல் குற்றச்சாட்டில் உண்மைகளை வெளிப்படுத்துவோருக்கு சட்ட ரீதியான சலுகை

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில் நடைபெறும் சிறப்பு தொல்லியல் கண்காட்சி இன்று பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2026 ஜூலை 2 ஆம் திகதி முதல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சயிதரன் மற்றும் களனி பல்கலைக்கழக தொல்லியல் பட்டப்பின் படிப்புக்கள் நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரின் இணைத் தலைமையில் சிறப்பு தொல்லியல் அகழாய்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கேரள பல்கலைக்கழக தொல்லியல் துறையும் பங்களிப்பு வழங்கி வருகிறது.

வட இலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலத்தைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான தொல்லியல் மையங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை கருதப்படுகிறது. 1980களில் பேராசிரியர் க. இந்திரபாலா, கலாநிதி இ. ரகுபதி ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளும், 2024ஆம் ஆண்டு வாழ்நாள் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இப்பகுதியின் தொன்மை, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னைய அகழாய்வுகளில் கருப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், உருக்குச் சான்றுகள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், முத்துக்கள், விலங்கு எலும்புகள், சங்கு ஓடுகள் உள்ளிட்ட பல அரிய தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், தமிழ்-பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட "கோவேத" முத்திரை வட இலங்கையின் ஆரம்ப அரசியல் அமைப்பும் எழுத்தறிவும் தொடர்பான அரிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.

இந்த அரிய தொல்லியல் பொருட்கள் அனைத்தும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் மாணவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"