BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல் மூன்று இலங்கையர்கள் காயம்; தூதரகம் நிலைமை கண்காணிப்பு

குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல் மூன்று இலங்கையர்கள் காயம்; தூதரகம் நிலைமை கண்காணிப்பு

குவைத் நாட்டின் பிரதான விமான நிலைய பகுதியில் ஈரான் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் புதன்கிழமை (03) இடம்பெற்றதாகவும், காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குவைத்துக்கான இலங்கை தூதர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

காயமடைந்த மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மூவரும் விமான நிலையத்துடன் தொடர்புடைய மின்தூக்கி பராமரிப்பு தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

சம்பவத்தையடுத்து குவைத் அரசாங்கத்தின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு இணங்க, அங்குள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"