BREAKING
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பாரம்பரிய உணவு: கும்மாயத்தின் நன்மைகள் என்ன? டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுங்கள்: பொதுமக்களுக்கு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை டிசம்பர் வரை சனி பகவானின் அருள்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் தண்டனை நிச்சயம் – அமைச்சர் ஆனந்த விஜயபால அதிரடி அறிவிப்பு குடும்பத் தகராறு விபரீதம்: தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனை தேடும் பொலிஸார் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பாரம்பரிய உணவு: கும்மாயத்தின் நன்மைகள் என்ன? டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுங்கள்: பொதுமக்களுக்கு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை டிசம்பர் வரை சனி பகவானின் அருள்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் தண்டனை நிச்சயம் – அமைச்சர் ஆனந்த விஜயபால அதிரடி அறிவிப்பு குடும்பத் தகராறு விபரீதம்: தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனை தேடும் பொலிஸார்

அண்ணாமலை புதிய அரசியல் கட்சி அறிவிப்பு? டெல்லி பேச்சுவார்த்தைகளுக்கு பின் நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்

அண்ணாமலை புதிய அரசியல் கட்சி அறிவிப்பு? டெல்லி பேச்சுவார்த்தைகளுக்கு பின் நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்

தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் K. Annamalai புதிய அரசியல் கட்சி தொடங்கும் வாய்ப்பு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஆரம்ப கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கி ராஜினாமா கடிதம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், கட்சி மேல்மட்டத்தில் சமாதான முயற்சிகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ள நிலையில், அந்த சந்திப்புக்குப் பின் நாளை அவர் தமிழ்நாடு திரும்பி புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக “We The Leaders” என்ற அமைப்பின் மூலம் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, பின்னர் அதனை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"