BREAKING
பரீட்சை விண்ணப்பங்களுக்கு இனி NIC கட்டாயம் – இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய அறிவிப்பு வெளியீடு அண்ணாமலை புதிய அரசியல் கட்சி அறிவிப்பு? டெல்லி பேச்சுவார்த்தைகளுக்கு பின் நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல் – மூன்று இலங்கையர்கள் காயம்; தூதரகம் நிலைமை கண்காணிப்பு செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி – மேலும் மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை 275 ஆக உயர்வு நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து – பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு பரீட்சை விண்ணப்பங்களுக்கு இனி NIC கட்டாயம் – இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய அறிவிப்பு வெளியீடு அண்ணாமலை புதிய அரசியல் கட்சி அறிவிப்பு? டெல்லி பேச்சுவார்த்தைகளுக்கு பின் நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல் – மூன்று இலங்கையர்கள் காயம்; தூதரகம் நிலைமை கண்காணிப்பு செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி – மேலும் மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை 275 ஆக உயர்வு நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து – பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு

கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட துயரச் சம்பவத்தில், பிரதான வீதிக்கு அருகிலிருந்த பெரிய மரம் ஒன்று திடீரென முறிந்து முச்சக்கர வண்டி மீது விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி நாவலப்பிட்டி - மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது காலை சுமார் 6.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவத்தையடுத்து நாவலப்பிட்டி காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மரத்தின் கீழ் சிக்கியிருந்த சடலங்களை மீட்டு நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுப்பி வைத்துள்ளனர்.

பிரதேசவாசிகள் கூறுகையில், நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் இருந்த யூகலிப்டஸ் மரத்தை அகற்றுமாறு பலமுறை கோரப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே இந்த துயர சம்பவம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"