BREAKING
பரீட்சை விண்ணப்பங்களுக்கு இனி NIC கட்டாயம் – இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய அறிவிப்பு வெளியீடு அண்ணாமலை புதிய அரசியல் கட்சி அறிவிப்பு? டெல்லி பேச்சுவார்த்தைகளுக்கு பின் நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல் – மூன்று இலங்கையர்கள் காயம்; தூதரகம் நிலைமை கண்காணிப்பு செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி – மேலும் மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை 275 ஆக உயர்வு நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து – பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு பரீட்சை விண்ணப்பங்களுக்கு இனி NIC கட்டாயம் – இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய அறிவிப்பு வெளியீடு அண்ணாமலை புதிய அரசியல் கட்சி அறிவிப்பு? டெல்லி பேச்சுவார்த்தைகளுக்கு பின் நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல் – மூன்று இலங்கையர்கள் காயம்; தூதரகம் நிலைமை கண்காணிப்பு செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி – மேலும் மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை 275 ஆக உயர்வு நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து – பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி மேலும் மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை ஆக உயர்வு

செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி மேலும் மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை ஆக உயர்வு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் நேற்றைய தினமும் புதிய மனித எலும்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் எலும்புக் குவியல்கள் உட்பட மொத்தம் 5 புதிய மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

இதனுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 6 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 275 மனித எலும்புத் தொகுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 272 தொகுதிகள் தற்போது முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தடயவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகழ்வுப் பணிகளின் போது சில எலும்புக் குவியல்களில் உடைந்த மண்டையோட்டுத் துண்டுகள் காணப்பட்டுள்ளன என்றும், அனைத்து மனித எச்சங்களும் நீதிமன்ற கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் நீதிமன்ற உத்தரவின் கீழ் தடயவியல் நிபுணர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"