BREAKING
பேருந்தில் பயணித்த பெண்ணின் தாலிக்கொடி திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார் இரவு நேரத்தில் உத்தரகாண்டை உலுக்கிய நிலநடுக்கம் பிரான்சில் மூன்று பிள்ளைகளின் தாயான தமிழ் பெண் கொலை; கணவன் கைது! 3 வாரங்களில் முழுமையான தயார்நிலையை எட்ட ஜனாதிபதி பணிப்புரை யாழ்.கச்சத்தீவு ஒப்பந்தங்களை மீண்டும் திறக்க மாட்டோம் ; இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம் பேருந்தில் பயணித்த பெண்ணின் தாலிக்கொடி திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார் இரவு நேரத்தில் உத்தரகாண்டை உலுக்கிய நிலநடுக்கம் பிரான்சில் மூன்று பிள்ளைகளின் தாயான தமிழ் பெண் கொலை; கணவன் கைது! 3 வாரங்களில் முழுமையான தயார்நிலையை எட்ட ஜனாதிபதி பணிப்புரை யாழ்.கச்சத்தீவு ஒப்பந்தங்களை மீண்டும் திறக்க மாட்டோம் ; இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம்

யாழில் முதியவர் மீது உழவியந்திரம் மோதி விபத்து உரிமம் இல்லாத சாரதி இயக்கியதாக அதிர்ச்சி தகவல்

யாழில் முதியவர் மீது உழவியந்திரம் மோதி விபத்து உரிமம் இல்லாத சாரதி இயக்கியதாக அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் நாவாந்துறை கடற்கரை வீதி பகுதியில் வீதியோரமாக நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், பின்னால் வந்த உழவியந்திரம் (டிராக்டர்) மோதி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை தகவலின்படி, நாவாந்துறை மீன் வாடிக்கு சொந்தமான இந்த உழவியந்திரம் எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதியதில் அவர் வாகனத்தின் கீழ் சிக்கி கடுமையாக காயமடைந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ நேரத்தில் உழவியந்திரத்தை இயக்கிய சாரதிக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அதே வாகனம் குறுகிய காலத்திற்குள் இரண்டாவது முறையாக விபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான உரிமமற்ற சாரதிகளால் கனரக வாகனங்கள் இயக்கப்படுவது பொதுமக்களின் உயிருக்கு பெரும் ஆபத்தாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"