BREAKING
பரீட்சை விண்ணப்பங்களுக்கு இனி NIC கட்டாயம் – இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய அறிவிப்பு வெளியீடு அண்ணாமலை புதிய அரசியல் கட்சி அறிவிப்பு? டெல்லி பேச்சுவார்த்தைகளுக்கு பின் நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல் – மூன்று இலங்கையர்கள் காயம்; தூதரகம் நிலைமை கண்காணிப்பு செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி – மேலும் மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை 275 ஆக உயர்வு நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து – பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு பரீட்சை விண்ணப்பங்களுக்கு இனி NIC கட்டாயம் – இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய அறிவிப்பு வெளியீடு அண்ணாமலை புதிய அரசியல் கட்சி அறிவிப்பு? டெல்லி பேச்சுவார்த்தைகளுக்கு பின் நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல் – மூன்று இலங்கையர்கள் காயம்; தூதரகம் நிலைமை கண்காணிப்பு செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி – மேலும் மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை 275 ஆக உயர்வு நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து – பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு

நாட்டை உலுக்கிய முதியோர் இல்ல தீ விபத்து; பேர் உயிரிழப்பு - பேரை தேடும் பணி தீவிரம்

நாட்டை உலுக்கிய முதியோர் இல்ல தீ விபத்து; பேர் உயிரிழப்பு - பேரை தேடும் பணி தீவிரம்

அங்குருவத்தோட்டா – படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் இல்லத்தில் சுமார் 72 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுவதுடன், அவர்களில் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீக்காயங்களுக்கு உள்ளான பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஏழு பேர் தற்போது ஹொராணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயன்ற போதிலும், கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்த இல்லத்தில் முதியவர்களுடன் மனநலம் பாதிக்கப்பட்ட சிலரும் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், விசாரணைக்காக மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நீதித்துறை விசாரணைகளும் தொடர்ந்துவருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"