யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பராமரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 14 குடியிருப்பாளர்களுக்கு நீதிமன்றம் மொத்தமாக ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பொது சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்த கள ஆய்வுகளின் போது இந்த மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கோப்பாய், இருபாலை மற்றும் நீர்வேலி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை பேணிய வீடுகள் அடையாளம் காணப்பட்டன. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையின் போது, குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட 14 பேருக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. டெங்கு பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக