வேத ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், கல்வி, வியாபாரம் மற்றும் தொடர்பாடல்களின் காரகனாக கருதப்படும் புதன் கிரகம், வரும் மே 29ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் பிரவேசிக்கிறது. ஜூன் 22ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த பெயர்ச்சி, 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த காலப்பகுதியில் “பத்ரா ராஜயோகம்” உருவாகுவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கலாம். ஆனால் குறிப்பாக கடகம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலமாக இது பார்க்கப்படுகிறது.
கடக ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம், தேவையற்ற செலவுகள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பண விஷயங்களில் கவனக்குறைவு ஏற்பட்டால் நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதால், செலவுகளை கட்டுப்படுத்தி அமைதியாக செயல்படுவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சி வசப்பட்ட முடிவுகளை தவிர்க்க வேண்டும். இந்த காலத்தில் அபாயகரமான முதலீடுகள் மற்றும் அவசர முடிவுகள் நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் பேசும் வார்த்தைகளில் கட்டுப்பாடு இல்லையெனில் உறவுகளில் சிக்கல்கள் உருவாகும் அபாயமும் காணப்படுகிறது.
தனுசு ராசிக்காரர்களுக்கு உறவுகள் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் தவறான புரிதல்கள் உருவாகக்கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் மற்றும் மாணவர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர். பொறுமையும் தெளிவான முடிவுகளும் இந்த காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
மொத்தத்தில், புதன் பெயர்ச்சி காலத்தில் பேசும் வார்த்தைகள், பண முடிவுகள் மற்றும் உறவுகள் தொடர்பாக எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்ல பலன்களை தரும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக