தமிழகத்தின் கோவை மாவட்டம் சூளூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன சிறுமி பின்னர் குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அருகில் வசித்து வந்த இருவர் இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், சிறுமியின் தாய் வெளியிட்டுள்ள புதிய குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு மகளின் உடலை தன்னிடம் காண்பிக்கவில்லை என்றும், தன்னுடைய அனுமதி இல்லாமல் சிறுமியின் தந்தை உடலை சேலம் மாவட்டத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“எனக்குத் தெரியாமல் உடலை எரித்துவிட்டனர். என் மகளுக்கு நீதி வேண்டும்” என்று கண்ணீருடன் தெரிவித்த தாயின் உருக்கமான பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் தமிழக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக