BREAKING
'ரன்', 'சண்டக்கோழி', 'வேட்டை' படங்களை விஜய் தவறவிட்டார் – இயக்குநர் லிங்குசாமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் காங்கேசன்துறை–கொழும்பு இன்டர்சிட்டி ரயில் சேவை மட்டுப்படுத்தல்: ஜூலை 10 முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயக்கம் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு: 8 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் மனித நுகர்வுக்கு தகுதியற்ற 4,250 தொன் சீனி பறிமுதல்: ரூ.850 மில்லியன் பெறுமதியுள்ள கையிருப்புடன் 4 பேர் கைது பொது அமைதியை பாதுகாக்க ஆயுதம் தாங்கிய முப்படையினரை களமிறக்க ஜனாதிபதி அவசர உத்தரவு 'ரன்', 'சண்டக்கோழி', 'வேட்டை' படங்களை விஜய் தவறவிட்டார் – இயக்குநர் லிங்குசாமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் காங்கேசன்துறை–கொழும்பு இன்டர்சிட்டி ரயில் சேவை மட்டுப்படுத்தல்: ஜூலை 10 முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயக்கம் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு: 8 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் மனித நுகர்வுக்கு தகுதியற்ற 4,250 தொன் சீனி பறிமுதல்: ரூ.850 மில்லியன் பெறுமதியுள்ள கையிருப்புடன் 4 பேர் கைது பொது அமைதியை பாதுகாக்க ஆயுதம் தாங்கிய முப்படையினரை களமிறக்க ஜனாதிபதி அவசர உத்தரவு

சூர்யாவின் 'கருப்பு' பட வசூலை முறியடித்ததா மோகன்லாலின் 'திரிஷ்யம் '?

சூர்யாவின் 'கருப்பு' பட வசூலை முறியடித்ததா மோகன்லாலின் 'திரிஷ்யம் '?

நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. உலகளவில் ஏற்கனவே 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ள 'கருப்பு' திரைப்படம், அதன் முதல் நாளில் இந்திய அளவில் சுமார் 15.50 கோடி ரூபாயும், உலகளவில் நல்ல தொடக்கத்தையும் பெற்றிருந்தது.


இந்நிலையில், மோகன்லால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள 'திரிஷ்யம் 3' திரைப்படம் 'கருப்பு' படத்தின் வசூலை முந்தியுள்ளது. ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ஜார்ஜ்குட்டியின் திரில்லர் கதையைக் காண ரசிகர்கள் தியேட்டர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.


திரிஷ்யம் 3 முதல் நாள் வசூல்:
உலகெங்கிலும் 5,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான 'திரிஷ்யம் 3', முதல் நாளில் இந்திய அளவில் 15.85 கோடி ரூபாய் நெட் (Net) வசூலையும், உலகளவில் சுமார் 43.37 கோடி ரூபாய் கிராஸ் (Gross) வசூலையும் பெற்று மிரட்டலான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாகக் கேரளாவில் மட்டும் முதல் நாளில் 11 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.


'கருப்பு' படத்தின் ஆரம்பகட்ட இந்திய வசூல் சாதனையை 'திரிஷ்யம் 3' முந்தியிருந்தாலும், கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால், வார இறுதி நாட்களுக்குப் பிறகும் இதே வசூல் வேகம் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"