தற்போதைய வாழ்க்கை முறையில், அதிக விறைவான உணவுகள், உடற்பயிற்சி குறைவு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்த வேலை போன்ற காரணிகளால் பலரும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உடல் கொழுப்பு அதிகரிப்பு என்பது பல ஆரோக்கிய சவால்களுக்கு அடிப்படை காரணமாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்த நிலையில், உடல் எடையை கட்டுப்படுத்த ஆளி விதைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆளி விதைகள் ஆன்டி ஆக்சிடண்ட்கள், ஆன்டி இன்பிளமேட்டரி தன்மைகள், நார்ச்சத்து மற்றும் மீனுக்கு இணையான ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல நன்மைகள் கொண்டவை. இதனால் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.
ஆளி விதைகளை பயன்படுத்துவதற்கான சில பரிந்துரைகள்:
பச்சையாக சாப்பிடலாம் அல்லது லட்டு, வறுத்த பொடி, எண்ணெய் போன்ற முறையில் சேர்த்து உட்கொள்ளலாம்.
தினமும் காலை ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை வெந்நீரில் கலந்து டீ போல குடிக்கலாம்.
ஸ்மூத்தி, தயிர் போன்றவற்றுடன் கலந்து உட்கொள்ளலாம்.
1 தேக்கரண்டி விதைகளுக்கு மேல் அதிகமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; வாரத்தில் 3–4 முறை பராமரிக்கலாம்.
ஆளி விதைகள் பொதுவாக நச்சில்லாதவை என்றாலும், சிலருக்கு செரிமான சிக்கல்கள் ஏற்படலாம். எனவே புதிய முறையில் சேர்க்கும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக