BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனை காக்க இத்தாலியின் புதுமையான திட்டம் மீன்பிடி வலைகள் பயன்படுத்த முன்மொழிவு

ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனை காக்க இத்தாலியின் புதுமையான திட்டம் மீன்பிடி வலைகள் பயன்படுத்த முன்மொழிவு

ரஷ்யாவின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களில் இருந்து Ukraine நாட்டை பாதுகாக்க, Italy செனட்டர்கள் புதுமையான திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் படி, இத்தாலிய மீன்பிடி நிறுவனங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பழைய மீன்பிடி வலைகளை தானமாக வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்வலைகளை உக்ரைனின் போர் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக மருத்துவமனைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வீதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது அமைத்து, ட்ரோன் தாக்குதல்களை தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

இந்த மீன்பிடி வலைகள், ட்ரோன்களின் propellers-இல் சிக்கி அவற்றை இலக்கை அடையும் முன்பே செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டவை. எளிமையான இந்த முறையினால் நவீன ஆயுதங்களுக்கு எதிராக ஒரு பயனுள்ள பாதுகாப்பு உருவாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Ivan Scalfarotto உள்ளிட்ட Italia Viva கட்சியின் செனட்டர்கள் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் மீன்பிடி வலைகள், இப்போது ட்ரோன் போர்களுக்கு எதிரான பாதுகாப்பு கருவியாக மாறியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மசோதாவின் கீழ், உக்ரைனுக்கு வலைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வலைகளை அகற்றும் செலவிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதுடன், வழங்கப்படும் வலையின் எடைக்கு ஏற்ப ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே Netherlands, Sweden, Denmark, United Kingdom மற்றும் France போன்ற நாடுகளின் தொண்டு நிறுவனங்கள் இதே போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், Giorgia Meloni தலைமையிலான இத்தாலி அரசு இதுவரை உக்ரைனுக்கு பல்வேறு உதவித் தொகுப்புகளை வழங்கியுள்ள நிலையில், இந்த புதிய திட்டம் உக்ரைனின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"