எதிர்வரும் ஏப்ரல் மாதப் பண்டிகைக் காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (02.04.2026) 32,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருள் (Jet-A1) அடங்கிய கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 6 முதல் 8-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளன.
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கு (Quota) அதிகமாக எரிபொருளை விநியோகிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பண்டிகைக் காலத்தில் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், விநியோகச் சங்கிலி தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக