BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: புதிய விகிதங்கள் மற்றும் முழு விபரங்கள்!

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: புதிய விகிதங்கள் மற்றும் முழு விபரங்கள்!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளமை மற்றும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள உற்பத்திச் செலவை ஈடு செய்ய மின்சாரக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் காலாண்டில் ஏற்படவுள்ள சுமார் 15.8 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மின்சார சபை 13.56% உயர்வைக் கோரியிருந்தது. எனினும், நுகர்வோரின் சுமையைக் கருத்திற்கொண்டு, அலகுகளின் அடிப்படையில் வெவ்வேறு சதவீதங்களில் இந்த உயர்வை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதித்துள்ளது. இதன்படி, குறைந்த அலகுகளைப் பயன்படுத்துவோருக்குக் குறைந்த சதவீதமும், 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக 25% வரையிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைத்தொழில், ஹோட்டல் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"