BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

கிளிநொச்சி மாணவன் சாதனை: உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்!

கிளிநொச்சி மாணவன் சாதனை: உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்!

நேற்றைய தினம் வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார். இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடத்துறையில் தோற்றிய இம்மாணவன், மூன்று பாடங்களிலும் 'A' (3A) சித்திகளைப் பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


திருக்குமரன் அகில இலங்கை ரீதியிலும், கிளிநொச்சி மாவட்ட ரீதியிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தத்திற்குப் பின்னரான மீள் எழுச்சியில் கல்வித் துறையில் பின்தங்கியிருந்த வடமாகாணத்திலிருந்து, குறிப்பாகக் கிளிநொச்சி போன்ற ஒரு மாவட்டத்திலிருந்து மாணவர் ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை ஒட்டுமொத்தத் தமிழ் பேசும் மக்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"