BREAKING
கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம் கொழும்பில் நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார, முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி போதையால் விபரீதம் ; பறிபோன உயிர்கள்; இளைஞனின் ஆணவ பேச்சு; நெட்டிசன்கள் கொதிப்பு! இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல் ; தோன்றிய விசித்திர துருவ ஒளிகள் 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு ; அரசாங்கம் திட்டம்

கள்ளக்குறிச்சியில் இருந்து உலக மேடைக்கு: வயது சிறுவன் தமிழ் அமுதன் செஸ் விளையாட்டில் உலக சாதனை!

கள்ளக்குறிச்சியில் இருந்து உலக மேடைக்கு: வயது சிறுவன் தமிழ் அமுதன் செஸ் விளையாட்டில் உலக சாதனை!

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தமிழ் அமுதன், செஸ் விளையாட்டில் உலக அளவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 4 வயதிலேயே செஸ் விளையாடத் தொடங்கிய இவர், தற்போது 9 வயதுக்குட்பட்டோருக்கான உலக செஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். குறிப்பாக, 2000 எலோ ரேட்டிங் புள்ளிகளைக் கடந்த மிக இளவயது வீரர் என்ற உலக சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரும் பகுதிநேரப் பயிற்சியாளருமான ரவிச்சந்திரனிடம் இலவசமாகப் பயிற்சி பெற்ற இவர், 6 வயதிலேயே மாநில அளவில் முத்திரை பதித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் வெள்ளிப் பதக்கம் வென்று, பரிசாக ஒரு காரையும் வென்றது குறிப்பிடத்தக்கது.


தமிழ் அமுதனின் இந்த அபார வளர்ச்சிக்குக் பின்னால் அவரது குடும்பத்தின் மிகப்பெரிய தியாகம் உள்ளது. விவசாயப் பின்னணியைக் கொண்ட இவரது தந்தை, மகனின் பயிற்சிக்காகப் பொருளாதார ரீதியாகப் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார். மகனின் தடையற்ற பயிற்சிக்காகத் தாய் அவருடன் வெளியூரில் தங்கியிருக்க, தந்தை தனது 10 வயது மகளுடன் சொந்த ஊரில் தங்கி குடும்பத்தைக் கவனித்து வருகிறார். செஸ் விளையாட்டுக்கான அதிகப்படியான பயணச் செலவுகள் மற்றும் பயிற்சிக் கட்டணங்களைச் சமாளிக்க முடியாமல் தவித்து வரும் இவரது தந்தை, நிதி நெருக்கடியால் பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இம்மாபெரும் சாதனையைத் தொடர்ந்து, தமிழக அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் இவருக்குத் தேவையான நிதி உதவி (Sponsorship) வழங்க முன்வர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"