சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் மெட்ரோ பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (27) பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் போக்குவரத்து வசதியை வழங்குமாறு லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு அந்நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, டிசம்பர் 3ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் மெட்ரோ பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க முடியும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக