BREAKING
மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி இன்று இடம்பெற்ற கோர விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம் திருமண உறவுக்குள் பாலியல் அத்துமீறல் ; 36 நாடுகளில் பெண்களுக்குப் சட்டப் பாதுகாப்பு இல்லை செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்; சம்பவத்தால் பரபரப்பு மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி இன்று இடம்பெற்ற கோர விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம் திருமண உறவுக்குள் பாலியல் அத்துமீறல் ; 36 நாடுகளில் பெண்களுக்குப் சட்டப் பாதுகாப்பு இல்லை செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்; சம்பவத்தால் பரபரப்பு

திருமண உறவுக்குள் பாலியல் அத்துமீறல் ; நாடுகளில் பெண்களுக்குப் சட்டப் பாதுகாப்பு இல்லை

திருமண உறவுக்குள் பாலியல் அத்துமீறல் ; நாடுகளில் பெண்களுக்குப் சட்டப் பாதுகாப்பு இல்லை

தெற்காசியப் பிராந்தியத்தில் நெருங்கிய துணையிடமிருந்து பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகள், உலகளாவிய சராசரியைவிட 35 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் 100க்கும் அதிகமான நாடுகள் திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் அத்துமீறலை குற்றமாக்கியுள்ளன.

எனினும், இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட சுமார் 36 நாடுகளில் இதற்கான முழுமையான சட்டப் பாதுகாப்பு இன்னும் வழங்கப்படவில்லை என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் அத்துமீறலுக்கும் ஏனைய பாலியல் அத்துமீறல் குற்றங்களுக்கும் சமமான தண்டனை வழங்கும் தெற்காசியாவின் ஒரே நாடாக மாலைதீவு விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் அத்துமீறலை குற்றமாக அங்கீகரித்துள்ள போதிலும், ஏனைய பாலியல் அத்துமீறலைக் குற்றங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான தண்டனைகளையே விதிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்த விடயம் தொடர்பான பெரும்பாலான சட்டங்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இந்தியா மற்றும் பங்களாதேஷில் இச்சட்டங்கள் 1860ஆம் ஆண்டையும், இலங்கையில் தொடர்புடைய சட்டங்கள் 1885ஆம் ஆண்டையும் அடிப்படையாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகள், இந்தச் சட்டங்கள் காலாவதியானவை எனச் சுட்டிக்காட்டுகின்றன. திருமண உறவுக்குள் இருந்தாலும், பெண்ணின் விருப்பமின்றி கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவது பாலியல் அத்துமீறலாகக் கருதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

இத்தகைய பாலியல் அத்துமீறல்கள் பெண்களின் உடல், உள, உணர்வு மற்றும் பாலியல் ஆரோக்கியத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக இந்தியாவில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 மனுக்கள் மீதான இறுதி விசாரணை எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எனினும், இந்தச் சட்ட மாற்றத்துக்கு இந்திய அரசாங்கம், மத அமைப்புகள் மற்றும் ஆண்கள் உரிமைகளுக்காகச் செயற்படும் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சட்டங்களைத் திருத்துவது மாத்திரம் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தாது எனவும் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"